பொது மக்களின் காணி அபகரிப்பு மற்றும் அரச காணி ஆக்கிரமிப்பு போன்ற கடந்தகால செயற்பாடுகள் குறித்து புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவோம் என நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.
காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.