காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தவுள்ள இஸ்ரேல் இராணுவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காசா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில் இவ்வாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்னர் ராஃபா எல்லை திறந்துவிடப்பட்டுள்ளது. அத்துடன் காசா மக்களுக்கான 20 லொறி நிவாரண பொருட்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காசா பகுதி மக்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், இந்த 20 லொறி நிவாரணம் என்பது கடலில் விழுந்த துளிக்கு சமம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒரு துளி, வரும் நாட்களில் பாயும் உதவி நதியாக மாறும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உதவி பணியாளர்கள் குழு காசாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

அக்டோபர் 7 முதல் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறைந்தது 1,782 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Article