காசாவில் அல்ஸிபா மருத்துவமனை மீதான தாக்குதலில் 3 மருத்துவதாதிமார் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காசாவில் உள்ள அல்ஸிபா மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலால் மூன்று மருத்துவதாதிமார் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனையின் ஒக்சிசன் உற்பத்தி நிலையம் இருதயசத்திரசிகிச்சை பிரிவு தண்ணீர் தொட்டிகள் உட்பட முக்கியமான கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுவதை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் மர்வன் அபு சடா பெரும் பொய் என நிராகரித்துள்ளார்.

நாங்கள் பொதுமக்கள் நான் மருத்துவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் நோயாளிகள் உள்ளனர் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் வேறு எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article