காசாவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தின் மீது திடீர் தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இஸ்ரேலின் முக்கிய தாக்குதல் குறியாக பாலஸ்தீனத்தின் காசா நகரம் அமைந்துள்ள நிலையில், அங்கு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காரணத்தால் இஸ்ரேல் ராணுவமானது காசா மீது இடைவிடாத தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இந்த இடைவிடாத தாக்குதலால் அங்குள்ள பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக காசா நகர மக்கள் அங்குள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் (Greek Orthodox church) வளாகத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில்  இஸ்ரேல் ராணுவம் இந்த தேவாலயத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், இடம்பெயர்ந்த பல மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த சர்வதேச ஊடகங்களின் தகவல் படி, காசா மக்கள் தஞ்சம் அடைந்து இருந்த மசூதியை சுற்றி இருந்த இடங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.

ஆனால் இஸ்ரேல் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து இதுவரை  எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article