கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால்ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம்நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப்புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில்நிலையத்தை வந்தடையும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும்ரயில், மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில்நிலையத்தை வந்தடையும் என்றும் திணைக்களம் கூறுகிறது.