காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் விநியோகிக்கப்படும்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால், இன்றைய தினம் (01.03) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்கும்  பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தமருதலிங்கம் பிரதீபன் அவர்களும்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணா அவர்களிடம் நேற்று இரவு கோரிக்கை முன்வைத்தார்கள்.

அதற்கமைவாக, பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக – இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகிக்க  வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment