கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் இன்றுடன் பணி ஓய்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

37 வருடங்கள் அரச சேவையாற்றி அகவை அறுபது எய்தி இன்றுடன் (ஜனவரி 31) அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் திருஞானம் ஜோன் குயின்ரஸ்அவர்களின் பிரிவுபசார வைபவம் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பங்கேற்புடன் நேற்று (ஜனவரி30) இசுருபாய கல்வி அமைச்சின்கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

1986ம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக இணைந்து அதிபராக, ஆசிரியகலாசாலை விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப்பணிப்பாளராக, தீவக வலயம் உட்பட 4 வலயங்களின் வலயக் கல்விபணிப்பாளராக,  மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக, மாகாண கல்விபணிப்பாளராக , கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article