கல்விக் கருத்தரங்கு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையும் கொழும்பு தமிழ் சங்கமும் இணைந்து நடாத்தும் கல்விக் கருத்தரங்கு நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி (2022.10.01) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் இடம் பெறவுள்ளது.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மதிப்பிற்குரிய திரு நடராஜர் காண்டிபன் தலமையில் நெடுந்தீவு றோமன் கத்தோலிக் பெண்கள் பாடசாலையில் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆரம்பக் கல்வி இடை நிலைக் கல்வி மாணவர்ளுக்கு ஏற்ற விதத்தில் கருப்பொருள்கள் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்விக் கருத்தரங்கின் வளவாளர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் திரு.வே.சேந்தன் அவர்களும், தேசிய கல்வி நிறுவகத்தின் மேனாள் பிரதம செயற்றிட்ட அதிகாரி திருமதி வானதி காண்டீபன் அவர்களும், கல்வியியல் ஆய்வாளர், அகவிழி ஆசிரியம் இதழ்களின் பிரதம ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்களும், கொழும்பு றோயல் கல்லூரியின் மேனாள் பிரதி அதிபர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்களும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளவாளர், மற்றும் கல்விக்குழுச் செயலாளர் திருமதி பவானி முகுந்தன் அவர்களும், சீர்மிய வளவாளர் திரு.தெ.உதயரூபன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article