வன்னிப் பெரு நிலப்பரப்பை தனது சிறந்த ஆட்சியின் கீழ் ஆண்ட, முல்லைத்தீவு ஆங்கிலேய கோட்டையை வெற்றி கொண்ட வன்னி மண்ணின் அடங்காப்பற்றின் இறுதி மன்னன், தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது ஆண்டு நினைவு விழா கடந்த 25 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு கற்ச்சிலைமடு பண்டாரவன்னியன் உருவச்சிலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ. உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து விழாவை சிறப்பித்திருந்தார். அதனை தொடர்ந்து கவியரங்கம்,நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயராணி மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.