கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது.

யாழ் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டித்தொடரில் நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தி இவ்வருடத்திற்கான கரம் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டது.

நேற்று முன்தினம் (செப்ரம்பர் – 27) ஆரம்பிக்கப்பட்ட இத் தொடரில் முதல் நிகழ்வாக யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் இடம் பெற்ற கரம் போட்டி நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்வில் மிக சிறப்பாக விளையாடி இவ்வருடத்திற்காக அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை நெடுந்தீவு பிரதேச செயக அணி பெற்;றுக்கொண்டுள்ளது.

தோடர்ச்சியாக நேற்றைய தினம் (செப்ரம்பர் – 28) கொக்குவில் இந்துக்கல்லூயில் இடம் பெற்ற சதுரங்கப்போட்டியிலும் இரண்டு வெற்றிகளையும் இரண்டு சமநிலைகளையும் பெற்று நான்காவது இடத்தினைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article