புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த நந்தகுமாா் 39 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும், கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியில் வயல் விதைத்துள்ளதாகவும் அதனை பார்வையிட நண்பருடன் சென்று விட்டு திரும்பிய போது நடந்துவரும் பாதையின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளா் திரு மாாிமுத்து பரமேஸ்வரன் அவா்கள் இன்றைய தினம் (ஜனவாி 27) கரடி தாக்கியவரை நேரடியாக சென்று மாஞ்சோலை வைத்தியசாலையில் பாா்வையிட்டு நலம் விசாாித்துக் கொண்டதுடன். அவருக்கான இழப்பீடுகள் வழங்குவதற்கான உாிய நடடிவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளாா்.