கம்பெனிகள் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த ஓகஸ்ட் 04 இல் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இச்சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன்நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்திருத்தம் மூலம், தனிப் பங்குதாரர் கம்பெனி அமைப்பு, பெயர்மாற்றத்திற்கு 20 நாட்கள் அறிவிப்பு காலம், பங்கு ஆணைப்பத்திர வழங்கல்தடை, பயனுகர் சொத்தாண்மை தகவல் வெளிப்படுத்தல், பதிவாளருக்கு அதிகாரவழங்கல், பிணக்கு மத்தியஸ்தம், பணிப்பாளர் அகற்றல் நடவடிக்கைகள், பொதுத் தண்டனைகள் மற்றும் மொழி உரைகளில் பிழை திருத்தம் ஆகியவைஉள்ளடக்கப்பட்டுள்ளன.
2025 ஜூன் 05 அன்று வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அபிவிருத்திஅமைச்சரால் முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலம், 2025 ஆம் ஆண்டின் 12 ஆம்இலக்க கம்பெனிகள் (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.