கனியவள திணைக்கள அறிக்கை பெற்ற பின் சட்ட நடவடிக்கை – சுண்ணக்கல் விவகாரம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

!யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனம் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர்நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் எனயாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கதெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால்சோதனையிடப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனம் தொடர்பில்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

சுண்ணக்கல் அகழ்வு என்பது பொலிஸாருக்கு பொறுப்பான காரியம் அல்ல. அதுகனிய வளங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இது தொடர்பில்கனிய வளங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சில நாட்களுக்கு முன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சுண்ணக்கற்களுடன்வாகனம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள்திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில்முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்தார்

Share this Article