ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் பல்வேறு நாடுகளில் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வந்த நிலையில் இன்று (24 ஜனவரி) இறுதி கட்டமாக கனடா மற்றும் அமெரிக்க வாழ் நெடுந்தீவு உறவுகளுக்கான கலந்துரையாடல் ZOOM செயலி ஊடாக நடைபெற்றது.
அனைத்துலக நெடுந்தீவு மக்களின் மண் சார்ந்த அபிவிருத்தி நோக்கிய கருத்துக்களும் உள்வாங்க பட்ட நிலையில் எதிரவரும் ஞாயிற்றுக்கிழமை (31 ஜனவரி) உலகெங்கும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகள் அனைவருக்குமான சர்வதேச கலந்துரையாடல் ஊரும் உறவும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் உலகெங்குமுள்ள நெடுந்தீவு மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறது ஊரும் உறவும் குழு.