கனடாவில் எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் 5,000 அரசாங்கஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விடயம் தொடர்பான யோசனை வரவு செலவுத் திட்டத்தில்முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை நிதி அமைச்சரும் பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட்தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செலவுகளை குறைக்கும் நோக்கில்இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாகஆட்சேர்ப்பு செய்யாது ஆளணி வள எண்ணிக்கையை வரையறுப்பதற்குஅரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் 4.2 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.