By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கதிர்காம பாதயாத்திரை செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பம்!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கதிர்காம பாதயாத்திரை செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பம்!
யாழ்ப்பாணம்

கதிர்காம பாதயாத்திரை செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பம்!

Last updated: 2023/05/06 at 5:33 PM
Published May 6, 2023 429 Views
Share
2 Min Read
SHARE
இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.
கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 46 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் பாதயாத்திரை இலங்கையின் மிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
கடந்த 23 வருடங்களாக சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக்கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.
செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேடபூசையைத் தொடர்ந்து மோகன்சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக் குழுத்தலைவர்  ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ள பாதயாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து  வழமையாக பயணிக்கும் நூறுபக்தர்களுடன் பாதயாத்திரை தொடர்ந்து இடம்பெறும்.
பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயாவேல்சாமி  தெரிவித்தார்.
இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம்  இன்று நடைபெறவிருக்கிறது.
 யூன் 19 ஆம் திகதி  கொடியேற்றம் இடம்பெற்று யூலை 4 ஆம் திகதி  எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
எதுஎவ்வாறிருப்பினும் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள்  மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
1972 ஆம் ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார். அதன்தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர்தாங்கிவந்த வேலை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.
அன்றிலிருந்து 21 வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றுவந்தது.கடந்த இரண்டு வருடங்களாக ஜெயாவேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
 ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவியபிற்பாடு 2012முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமாகியது.

You Might Also Like

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

Anarkali May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா!
Next Article வீனஸ் தனியார் வைத்தியசாலையில் இரத்த தான முகாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?