கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த ஒருவர் எலி காய்ச்சல் தாக்கத்தால் இன்று (டிசம்பர் 07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த , 43 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் மறைந்தவர்.
இந்த மாதம் 5ஆம் திகதி காய்ச்சல் அறிகுறிகள் தோன்றியதையடுத்து, அவர் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, எலி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கும் பலனளிக்காமல் இன்று காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.