கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞன் அதிரடியாக கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன்கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு விமான நிலையஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL-263 விமானத்தில் பயணிப்பதற்காகவிமான நிலையம் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். ஆள்மாற்றம் செய்யப்பட்டு கடவுச்சீட்டு பெறப்பட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைக்காக 1.8 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதாகசந்தேக நபரான இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கவிமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share this Article