கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் அனுமதியோடு பங்கேற்படு வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் பிப்ரவரி 26, 27 தேதிகளில் நடைபெறவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை இந்திய துணை தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பகுதிக்கு உட்பட்ட 150 பேரை திருப்பணிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பக்தர்கள் மறுக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.