கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை திருப்பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளையதினம் (மார்ச்14 ) வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (மார்ச் 13) நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் தட்சனாமருதமடு பங்குத்தந்தையும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.

இதன்போது திருவிழா ஆயத்த பணிகளுக்காக கச்சதீவு வந்திருந்த நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் அலுவலர்கள், நெடுந்தீவு பங்கினைச் சேர்ந்தோர் என பலர் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா: பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (மார்ச் 12) மாலை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து திருவிழாவிற்கு வருகை தரவுள்ள பக்தர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவுப் ஏற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் வழங்கல், ஒலி-ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில், யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், இந்திய துணைத் தூதுவர் திரு இ. நாகராஜன், இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி சி. எஸ். ரம்மியா, வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

 

4o
Share this Article