கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆயத்தப்பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நெடுந்தீவு பிரதேசசெயலர் ந.பிரபாகரன் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (16/02) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார், நெடுந்தீவு பிரதேசசபையினர், இலங்கை செஞ்சிலுவை சங்க நெடுந்தீவு கிளையினர், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர், சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கச்சதீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் தொடர்பாகவும் , திருவிழாவினை சிறப்புற மேற்கொள்ளவுள்ள குறித்த அரச அரச சார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புகள் தொடர்பாகவும்விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
