கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம்திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு செல்லும் பக்தர்களுக்கான குறிகாட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார்போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதுடன் மார்ச் 14 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 11.30 வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் குறிகாட்டுவானுக்கு புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாத்திரிகர்களுக்கு மார்ச் 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.