கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்தகொள்ளவுள்ள இந்திய பக்தர்களின் முதல் படகு 22 ஆண்கள் 10 பெண்கள் 01சிறுவன் என 33 பேருடன் இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கச்சதீவு துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.
இன்று (மார்ச்14) காலை 7.30 மணிக்கு இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருத்து புறப்பட்ட படகே இவ்வாறு வந்துள்ளது. இப்படகு மூலம் 33 பேர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரந்து இந்தியாவில் இருந்து 78 இழுவைப் படகுகளிலும் 22 நாட்டுப்படகுகளிலும் என சுமார் 3400 பக்தர்கள் வரவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.