குடும்பத் தகராறு காரணமாக ஒரே நாளில் இரண்டு உயிரிழப்புகளும் ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்துகம – அழுத்கங்கொட பகுதியில் ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தினால் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, இளைய சகோதர் மீது மூத்த சகோதரர் கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதால் இளைய சகோதரர் படுகாயமடைந்த நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூத்த சகோதரர் அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசித்து பாரவூர்தி ஒன்றின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதேவேளை, சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை கேள்வியுற்ற அவரின் தாய் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.