ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடமாற்றம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மாவட்ட மற்றும் அமைச்சர்கள் மேன்முறையீட்டுச் சபைகளால் பரிசீலிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட, இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கான விசேட காரணங்களைக் கொண்ட அதிகாரிகளைத் தவிர்த்து, ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை நிறைவு செய்த அனைத்து கிராம சேவையாளர்களுக்கும் இடமாற்றங்கள் பொருந்தும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவுகள் அமைச்சினால் மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த போதிலும் வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்படாத அதிகாரிகளுக்கு இடமாற்றங்களை வழங்குவதற்கும் அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article