ஒரு நாள் கிரிக்கெட்டில், அதிக சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரைஇறுதி போட்டியில் நேற்று தனது 50வது சதத்தை விராட் கோலி கடந்ததன் மூலம் அவர் இந்த சாதனையை பெற்றுள்ளார்.

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சச்சின் 673 ஓட்டங்களை குவித்தே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 673 ஓட்டங்களை கடந்துள்ளார்.

இதன் மூலம் விராட் கோலி (674*) ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற சச்சின் (673) சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் விராட் கோலி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை 50ற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

Share this Article