ஒன்றாக நீராடிய யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்றஇடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்புமற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் ஆவர்.

மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும்நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்தபகுதிக்கு நீராடச் சென்ற போதே இருவரும் இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகபொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொதுசுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

Share this Article