ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வு இரத்து செய்யப்படுமா? இதுதொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன?

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் இரத்து செய்வதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, இன்று (ஜூன் 4) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போது புலமைப்பரிசில் இரத்து செய்வதற்கான திட்டமில்லை. ஆனால் கல்வி சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் மீது ஏற்படும் மாற்றங்களை எதிர்பார்த்து செயற்படுவோம். இதனாலேயே, அந்த தேர்வின் அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2028 அல்லது 2029ஆம் ஆண்டுக்குள் அந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்,” என அவர் கூறினார்.

Share this Article