எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டாம் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30 இற்கும் மேற்பட்டதமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுவருவதன் எதிரொலியாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள்சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும் உயிர்காக்கும்உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறைஅதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களையும்எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம்சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று (10) நாகை மீனவர்களை இலங்கை கடற்படைகைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால்மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (26) வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து கடலுக்குமீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறைஉதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறைஅதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக ‘இந்திய இலங்கை சர்வதேச கடல்எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். மீனவர் அடையாளஅட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு’ எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Share this Article