எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு (ஒக். 04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரேஇந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனப்பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இருப்பினும் வீட்டின் ஒரு கண்ணாடி யன்னல் சேதமடைந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் அப்பகுதியில் உள்ள போதைப்பொருள் தொடர்பானசெயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தமைக்கானபழிவாங்கலாக இத்தாக்குதல் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் இன்னும் வெளியாகவில்லை. எல்பிட்டிய பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.