யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவதனதுபாராளுமன்ற உரையின் போது (மார்ச் 08) முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும்இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதைஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கின்றது என அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதன் அறிக்கையில்,
மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றிகருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களைஉருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மதஉணர்வுகளை தூண்டும் நிலையை உருவாகக் கூடும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும்விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில்மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடையஅமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன்செயல்பட்டு வருகிறது.
இவ்வாறான மத சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொதுமன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும்சிறந்ததாகும். டொக்டர் அர்ச்சுனா உட்பட அனைத்து பாராளுமன்றஉறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில்தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம்தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.
அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கைஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவுபெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்வதாகவும் அகில இலங்கைஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.