நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வடதாரகைப் படகு சில நாட்களுக்கு முன்னர் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் கட்டப்பட்டு மக்களுக்கு இடையூறாக காணப்பட்டது அதனை நிவர்த்தி செய்யும் முறையில் தற்போது நயினாதீவு நாகவிகாரைக்கு அன்மையில் உள்ள இறங்கு துறைமுகத்தில் தற்போது நிறுத்தி வைக்க்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினை தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த வருடம் நவம்பர் மாதம் திருகோணமலையில் உள்ள கடற்படை படகு தளத்திற்கு கொண்டு சென்று திருத்துவதற்காக 33 மில்லியன் ரூபாய் பெறுமதியான விலை மனுக்கோரல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாகவும் அதனை தாங்கள் கொழும்பு தலைமைக்காரியாலய பொறியியல் பீட்திற்கு அனுப்பி வைத்த போதும் கொரோன காலத்தில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை ஆயினும் தற்போது மேலதிக திருத்தங்களும் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே குறிக்கப்பட்ட 33 மில்லியன் ரூபாயினை விட அதிக தொகை செலவு ஏற்படும் என்பதனை குறிபிட்டு நினைவூட்டல் கடிதத்தினை கொழும்பு தலமைக் காரியலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்களது அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வாரத்தில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெறும் எனவும் அதன் பின்னர் வடதாரகைப் படகு திருகோணமலை கொண்டு செல்லப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் போக்குவரத்தினை கவனத்திற் கொண்டு மிக விரைவாக இந்நடவடிக்கையினை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தல் வேண்டும்