என்மீதான பொய்யானதும், உண்மைக்குப் புறம்பானதுமான குற்றச்சாட்டுகளைவிசாரணை செய்து உண்மையினை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது கடித்த்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
குறிப்பாக, தேர்தல் அறிவிப்பு காலங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் தொடர்பிலான கூட்டத்தொடர் நடைபெறுகின்ற காலகட்டங்களிலும் முன்வைத்து வருகின்ற, இல.21, பொல்வத்தை, இராஜகிரிய எனும் விலாசத்தைச்சேர்ந்த சுப்பையா பொன்னையா அல்லது சதா என்று அழைக்கப்படுகின்ற நபர், அண்மையில் அதே வகையிலான – அவரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுவந்துள்ள வழக்கமான விடயங்களை கடந்த 09.09.2025ஆம் திகதியாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு முன்வைத்திருக்கிறார்.
இந்நபர் ஏற்கனவே எமது கட்சியில் இருந்து, சட்டவிரோத, மக்கள் விரோத, கட்சிவிரோத செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டு வருவதாக அறியப்பட்டதன் பின்னர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
எமது கட்சியானது ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வினைமுன்வைத்து, தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்து, நாடாளுமன்றஜனநாயகத்தின் ஊடாக, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், இதனைவிரும்பாத புலிகள் இயக்கம் உள்ளிட்ட அதன் பினாமிகளும் ஏனைய தரப்பினரும்எமக்கு எதிரான சேறுபூசல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு விலைபோனவராக இந்த நபரும் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் அந்நபர் கடந்த 09.09.2025ஆம் திகதி ஊடகங்களுக்குக்கூறியுள்ள கூற்றுக்களில் பலரது மரணங்கள் தொடர்பில் என்மீதும், எனதுகட்சியின்மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார். அவற்றிலிருந்து மூன்று விதமான விடயங்களை மாத்திரம் இங்குகுறிப்பிடுகின்றேன்.
1. யாழ்ப்பாணம், மண்டைதீவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த15 – 20 பேரினை நான் பார்க்கச் சென்றதாகவும், எனக்கு சிங்கள மொழிப்பிரச்சினை காரணமாக அவரையும் (பொன்னையா) மொழிபெயர்ப்புக்கெனஅழைத்துச் சென்றதாகவும் கூறுகின்ற இந்த நபர், அங்கு நான் அந்த 15 – 20 பேரினை பார்த்துவிட்டு, இராணுவத்தினரிடம் அவர்களை விடச் சொன்னேனோ, சுடச் சொன்னேனோ தெரியாது என்கிறார். ஆனால் அங்கிருந்து நாங்கள் அகன்று02 நிமிடங்களில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாகவும், அந்த 15 – 20 பேரினைஇராணுவம் சுட்டுக் கொன்று அங்கிருந்த பங்கருக்குள் போடப்பட்டுபுதைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
2. 1990களில் கொழும்பு 05, இல.121, பார்க் வீதி உட்பட கொழும்பில் எமதுகட்சியினர் பயன்படுத்தியிருந்த ஐந்தாறு வீடுகளில் பலவந்தமாக ஆட்களைக்கடத்திக் கொண்டுவந்து, கொலைகள் செய்து, அசிட் போட்டு, புதைத்தாகக்கூறுகின்றார்.
அந்த காலத்தில் கொழும்பில் எமது கட்சி சார்ந்த உறுப்பினர்களை புலிகள்இயக்கத்தினரிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் எமது கட்சி செயற்பாடுகளைமுன்னெடுப்பதற்காகவும் ஐந்தாறு வீடுகளை நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். அந்த இடங்கள் தற்போது அதன் உரிமையாளர்களால் பல மாடிக் கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிட ஒப்பந்தகாரர்களை விசாரித்தால் தெரியும். அந்தகட்டிடங்கள் அமைக்கும் போது நிலத்தினை பல அடிகள் ஆழமாக தோண்டியபொழுது எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டனவா என தெரியவரும்.
3. அடுத்து புலிகளால் கொல்லப்பட்ட எமது கட்சி முக்கியஸ்தர்களையும், கட்சிஉறுப்பினர்களையும் ஈபிடிபியினரே கொன்றதாக கூறியிருக்கின்றார். அவ்வாறுபுலிகளால் கொல்லப்பட்ட எம்மவர்களில் சிலரது உடல்களை நோர்வேதூதரகத்திற்கு முன் வைத்து போராட்டம் நடத்தியது உங்களுக்கு ஞாபகம்இருக்கும் என நம்புகின்றேன்.
இவரது இத்தகைய விடயங்கள் தொடர்பில் நான் ஏற்கனவே முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் 13.08.2020ஆம் திகதிய கடிதத்தின் மூலமாக முறைப்பாடுசெய்திருந்தேன். (அதன் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) அதன்அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்நபரது கருத்துக்களில்எவ்விதமான உண்மையும் இல்லை என பொலிஸ் மா அதிபரினால் வாய்மூலமாகஎனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும், அந்நபர் தனது செயற்பாட்டினைகைவிடாமல் அதனையே தொடர்கின்ற நிலையில், தனிப்பட்ட முறையில்எனக்கும், எனது கட்சிக்கும் தொடர்ந்து களங்கத்தையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்.
எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அவர் கூறுகின்றஅனைத்து விடயங்கள் தொடர்பிலும் நியாயமானதொரு விசாரணையைமேற்கொண்டு, உண்மையினை கண்டறிய வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.