தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினருமான விமல் வீரவன்ச நேற்று (ஒக். 10) விடுத்துள்ள அறிக்கையில்,
தான் கடந்த வியாழக்கிழமை (ஒக்.09) வழங்கிய வாக்குமூலத்தின் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளை மட்டும் தங்காலைப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் ஏதோ நோக்கத்துடன் மாற்றி வெளியிட்டுள்ளார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
”பெலியத்த சனா” அல்லது “புவக்கந்தாவ சனா” என அடையாளம் காணப்பட்டஒருவரின் கைது தொடர்பில் தான் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, தங்காலைப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்துக்குச் சென்று, தான் மூன்று மணி நேரம் நீடித்த முழுமையான வாக்குமூலத்தை வழங்கியதாகவீரவன்ச கூறினார்.
தமது நிலைப்பாட்டை விளக்கும் முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டு, பொலிஸார் தமது வாக்குமூலத்தின் பகுதிகளை “வேண்டுமென்றே திருத்தியும்சிதைத்தும்” ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தத் தெரிவு செய்யப்பட்ட வெளியீடு, சந்தேகநபரின் அரசியல் தொடர்புகளைமறைப்பதற்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் பொலிஸார்மேற்கொள்ளும் முயற்சி போல் தெரிகிறது என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
விடயத்தின் பின்னால் உள்ள உண்மையை கண்டறிவதில் கவனம்செலுத்துவதற்குப் பதிலாக, பொலிஸார் “தமது சுயாதீனத்தன்மையைக்குலைக்கும்” வகையிலும், “அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரத்தின் ஒருகையாகவும்” செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
வீரவன்ச தனது அறிக்கையில்,
“பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடத்தை சட்டத்தை மதிக்கும் பொலிஸ் சேவைக்கு அல்ல, மாறாகஅரசாங்கத்தின் ஒரு சேறு பூசும் நடவடிக்கைக்கு மட்டுமே பொருந்தும்,” எனக்கூறியுள்ளார்.