எதிர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலவச கல்வியில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வை வலியிறுத்தியும்,
இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண புதிய அதிபர் சங்கம், வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் ஆகியன இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபம் முன்பாக ஆரம்பித்து மாவட்ட செயலகம் வரை வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த வாகனப் பேரணியில் அனைத்து ஆசிரியர்களும். அதிபர்களும் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என்பதுடன் , எமது போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்டு அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க அழைப்பு விடுக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.தீபன்தீசன் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Share this Article