ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை தரம் 1 முதல் 13 வரையான மாணவர்கள் கல்வி பயிலும் 1C தரமுள்ள பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதை அடுத்து நேற்று (06 ஜனவரி) முதல் உயர்தரப் பாடசாலையாக தனது கல்விச் சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளது.
குறித்த பாடசாலை தரமுயர்த்தப்பட்டமை மற்றும் புதிய பாடசாலை கட்டட திறப்பு விழா என்பன பாடசாலை முதல்வர் அருட்சகோதரி மேரிசன் திரேஸ் மேரி கனிஸ்ரஸ் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பாடசாலையின் உயர் தர வகுப்புக்களை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது தீவக வலயக்கல்விப் பணிப்பாளர்இ மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் இ வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இளங்கோவன்இ ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவிஇ ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் ஜெயகாந்தன்இ வேலனை பிர தேச சபையின் தவிசாளர் கருணா கரகுருமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
1872 இல் ஆரம் பித்த மேற்படி பாடசாலை, இவ் வாண்டு 150 ஆண்டினை பூர்த்தி செய்வதுடன் பாட சாலை சமூகத்தினரின் வேண்டு கோளுக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பாடசாலையை தரமுயர்த்த முழு முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்த பாடசாலை முதல்வர் அருட்சகோதரி அதற்காக அமைச்சருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றி களையும் தெரிவித்தார்.