ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் (KPL_SEASON_IV ) கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை பதிவு செய்யும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
17 வயதிற்கு மேற்பட்ட (2005.12.31 திகதிக்கு பின்னர் பிறந்தவர்கள்) அனைத்து தீவக வீரர்களும் தங்கள் பதிவுகளை https://forms.gle/dvrmBYwTsgMEFMRq9 என்ற Link இன் ஊடாக அல்லது QR Code இன் ஊடாக பதிவு செய்து கொள்ள முடியும்.
இப்போட்டிக்காகான போட்டியாளர் பதிவுக்கட்டணம் மற்றும் கட்டண விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னர் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டோர்(உள்ளகவீரர்கள்) 250 ரூபாவும், வேலணை,நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டோர் (வெளியக வீரர்கள்) 500 ரூபாவும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பதிவுக்கட்டணத்தை தங்கள் கழகத்தின் ஊடாக அனுப்பி வைக்குமாறும் , பதிவுகளை சரியான முறையில் பதிவு செய்து கொள்ள தவறினால் ஏலத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் கட்டுப்பணத்தினை கழகத்தின் ஊடாக செலுத்தாதவர்கள் ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.