ஊர்காவற்துறையில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய 18 இளைஞன் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும், 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளார்.

அது தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமி தான் காதலித்த இளைஞனுடன் வீடொன்றில் வாழ்வதனை அறிந்து, அங்கு சென்று சிறுமியை மீட்டதுடன் , இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார் , இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article