நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சிகளில் ஒன்றான ஊரும் உறவும் நெடுந்தீவு உறவகளாய் ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்குவோம எனும் தொனிப்பொருளில் இடம் பெறும் நிகழ்வுக்கான ஆயத்தங்கள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் நேரடியாக மக்களுக்கு இது தொடர்பான அழைப்பிதல் கடிதங்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகி;ன்றது. இதனை முன்னிட்டு சிரமதான நிகழ்வும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு உறவுகள் அனைவரையும் இயன்றளவு இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஊரும் உறவும் நிகழ்விற்கான ஒருங்கிணைப்புக்குழு அன்புடன் வேண்டி நிற்கின்றது.
💥நிகழ்ச்சி நிரல்💥
1. மங்கள விளக்கேற்றல்
2. மெளன ஆராதனை
3. வரவேற்புரை
4. ஆசியுரை – மதகுருமார்கள்
5. வாழ்த்துரை – பிரதேச செயலர், பிரதேச சபைத்தலைவர்.
6. அறிமுக உரை – ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் நோக்கம், செயற்பாட்டு வடிவம், நிர்வாக கட்டமைப்பு சார் விளக்கம்.
7. கருத்துரை- நெடுந்தீவின் ஆர்வலர்களின் ஆலோசனைகளும் ஊரிற்கான தேவைகளும்(இளைஞர், யுவதிகள், பெரியோர்கள், உத்தியோகத்தர்கள், அதிகாரிகள்)
8. தொகுப்புரை – ஆர்வலர்களின் ஆலோசனைக் கருத்துக்கள் தொடர்பில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் செயற்படிமுறை விளக்கம்.
9. நிர்வாகத்திற்கான உறுப்பினர்களை விருப்பின் அடிப்படையில் உள்வாங்குதல்
10. நன்றியுரை
11. மதிய உணவு
12. செயலமர்வு