ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் பொது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் நாட்டின் தற்போதைய நிலை ஆபத்தானதாக மாறிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் செயற்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து சுகாதார அமைச்சினால் சுகாதார வழிகாட்டி விநியோகிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும், பேருந்து மற்றும் புகையிரதம் போன்ற பொது போக்குவரத்தின் இருக்கைக்கு நுற்றூக்கு 75 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது.
அதேவேளை, அரச மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் குறைந்த பட்ச ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும்.
சூப்பர் மார்க்கெட் மற்றும் வியாபார நிலையங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் மூடப்பட வேண்டும்.
உட்புற, வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது மக்களின் அசட்டையீனமே மீண்டும் கொரோனா வேகமாக பரவுவதற்கான காரணம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.
Ministry of health