உள்ளூராட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க விசேட ஏற்பாடு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேடஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு விசேடஅறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஓரளவுக்கு கண்பார்வை மங்கிய அல்லது கண்பார்வையற்ற நபர்கள்தங்கள் வாக்குகளை சுயமாக செலுத்தும் வகையில் வாக்குச்சீட்டின் மீதுதொட்டுணரக்கூடிய ஸ்டென்சில் சட்டகம் ஒன்றைப் பயன்படுத்தும் வசதிஅனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் போன்ற கருவிகளின்துணையுடன் வரும் நபர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் இலகுவாகப்பிரவேசிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் வருகை தரும் நபர்கள் மற்றும் உயரம் குறைந்தவர்கள்இலகுவாக வாக்களிக்கும் வகையில் வாக்குப் பெட்டியை குறைவான உயரத்தில்வைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல் பத்திரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பார்வைக்குறைபாடு கொண்டவர்கள் கண்ணாடி அல்லது லென்ஸ்பயன்படுத்தி வாக்களிக்க விரும்பினால் அதற்கும் வசதி செய்து கொடுக்குமாறும்குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாற்றுத்திறனாளிகளுக்குவழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையானது வாக்களிப்பவரின் அடையாளத்தைஉறுதிப்படுத்தும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளும் படியும் வாக்குச் சாவடிபொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article