உலக கோப்பை இறுதிப் போட்டி!- இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று (நவம்பர் 19) பலப்பரீட்சை நடத்துகிறன.

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டியாக இந்த போட்டி அமையப்பெற்றுள்ளது.

குறித்த போட்டியானது இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த போட்டியில் நடப்பு தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியை பெறாத அணியாக இந்திய அணி முன்னேறியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தகுதிகான் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியை தழுவிய நிலையில் எனைய போட்டிகளில் அனைத்திலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இதுவரை 8 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. இந்த தொடர்களில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை ஐந்து முறை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

Share this Article