உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழரான பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை இன்று (07/12) சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றார்.

இன்று சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில், பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்கள் சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons) உலக அமைப்பின் தலைவராக தெரிவாகியமை தமிழர்கள் அனைவருக்கும் பெருமை.

இவர் யாழ் கைதடி மண்ணின் மைந்தனும், புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

இவர் தற்போது அமெரிக்காவின் சான்போர்ட் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இவர் அடிக்கடி இலங்கை வருகை தந்து பல்வேறு சுகாதார நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருவதோடு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் ஆரம்பிக்க காரணமான முக்கிய நபராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment