உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்குஅமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவுகோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளது.
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கொலை மற்றும் சாய்ந்தமருதுகுண்டுவெடிப்பு உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாகமுக்கியமான தகவல்களை மறைத்தல், விசாரணையில் தவறான கருத்துக்களைதெரிவித்தல், ஆதாரங்களை மறைத்தல் மற்றும் துல்லியமான உண்மைகளைவெளியிடாதது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகபொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்போது 72 மணி நேரதடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தேவைப்பட்டால் அவரை மேலும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிவழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.