உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன்தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில்விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண்கள் உட்பட 12 சந்தேக நபர்களை விடுவிக்குமாறுகொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (மே16) உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய திருப்புமுனைஎனக் கருதப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கூறியபயங்கரவாத விசாரணைப் பிரிவு, சம்பந்தப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில்சமர்ப்பித்த பின்பு விடுவிப்பு இடம்பெற்றுள்ளது.

சட்டத்தரணியின் கோரிக்கையின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும்போது பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட சொத்துகள்அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share this Article