உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவிஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்றமாணவியொருவர் இம்முறை இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில்தோற்றியிருந்தார்.
இந்நிலையில், குறித்த மாணவி பரீட்சைக்கு தோற்றி விட்டுவீட்டுக்கு வந்துள்ளார். இறுதியாக இடம்பெற்ற பரீட்சை திருப்திகரமாகஇல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரதுதந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றவேளை, குறித்த மாணவி வீட்டில்தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்றுபரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது