2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கானவிண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியைபரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வஇணையத்தளமான www.doenets.lk அல்லதுwww.onlineexams.gov.lk/eic மற்றும் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான ‘DoE’ இனைபயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின்விண்ணப்பதாரிகள் அந்தந்த பாடசாலை தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்றபின்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம்நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.