உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் விரைவில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிரவரும் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக்கருத்தைத் தெரிவித்தார்.

2024இற்கான பரீட்சையில் மொத்தம் 333,183 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள். 79,793 பேர் தனியார்பரீட்சார்த்திகள் ஆவர்.

இப் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

உயர் தரப் பரீட்சையின் 66 பாடங்களுக்கான செயல்முறை பரீட்சையானதுகடந்த பெப்ரவரி 08 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

Share this Article