உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப்பெறுபேறுகள் நேற்றையதினம் (மே31) வெளியாகிய நிலையில் அகில  இலங்கைரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் ஆனந்தா கல்லூரியின்சிரத் நிரோத முதலிடம் பிடித்துள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் கினிகத்ஹேனமத்திய கல்லூரியின் செஹானி நவோத்யா முதலிடம் பிடித்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியின் உபனிலெனோரா முதலிடம் பிடித்துள்ளார்.

கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த தசுன் ரித்மிகா விதானகேமுதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

பாணந்துறை மகளிர் கல்லூரி மாணவி ஷெஹாரா சிதுமினி புஞ்சிஹேவா வர்த்தகபிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

உயிர் முறைமைகள் தொழிநுட்பம் பிரிவில் முதலாம் இடத்தை எஹலியகொடமத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் கிருலு ஷில்திய பலியகுருபெற்றுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரிமாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடுமுழுவதிலுமிருந்து தோற்றியிருந்தனர்.

Share this Article