உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களுக்கான உணவுப் பொருள்கள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று (ஜனவரி 9) நடைபெற்றது.
யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
உலக உணவு திட்டம் மற்றும் வேர்ல்ட் விசனும் இணைந்து தெல்லிப்பழை, சங்கானை, வேலணை, மருதங்கேணி, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களிலுள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களுக்கு உணவு பொருள்களை விநியோக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
அதில் ஏற்படுகின்ற இடர்பாடுகள், குறிப்பாக விலை நிர்ணயம் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விதம் தொடர்பாக கலந்துரையாப்பட்டன.
திட்டமிடல் பணிப்பாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,உலக உணவு திட்டப் பிரதிநிதி, வேர்ல்ட் விசன் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர், வேர்ல்ட் விசன் மாவட்ட இணைப்பாளர், கூட்டறவு அபிவிருத்தி பிரதிநிதி, கூட்டுறவு சங்க முகாமையாளர்கள் களஞ்சிய உதவியாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.